பெரியாம்பட்டி ஊராட்சியில் காரியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் திரு KP அன்பழகன் அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்...

பெரியாம்பட்டி ஊராட்சியில் காரியமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இன்று மாண்புமிகு உயர் கல்வி அமைச்சர் திரு KP அன்பழகன்  அவர்கள் நிவாரண பொருட்கள் வழங்கினார்


" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />



காரிமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து கிராமங்களில் இருக்கும் கட்டுமான தொழிலாளர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினர்களாக உள்ள தொழிலாளர்களுக்கு அரசால் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் இன்று பெரியாம்பட்டி ஊராட்சியில் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் திரு கேபி அன்பழகன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி மலர்விழி IAS மற்றும் திட்ட இயக்குனர் மற்றும் காரிமங்கலம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி மீனா திரு தண்டபாணி மற்றும் பாலக்கோடு சர்க்கரை ஆலை இயக்குனர் திரு PP ரவிசங்கர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் திரு PL ஜெயலட்சுமி சங்கர் மற்றும் காரிமங்கலம் ஒன்றிய குழு உறுப்பினர் திரு V உதயகுமார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சிவதாஸ் மற்றும் கூட்டுறவு வங்கி தலைவர் திரு சந்திரன், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் கல்பனா ஷங்கர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு KP அன்பழகன் அவர்கள் கொரோன நோய் தடுப்பு பணிகளில் மிக சிறப்பாக மாவட்ட நிர்வாகம்  சிறப்பான முறையில் நோய்த்தடுப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன இதற்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் வெளியே வந்தால் போதும் தேவையில்லாமல் பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் சமூக இடைவெளி பின்பற்றவேண்டும் முகக் கவசங்கள் அணிந்து கொண்டு வெளியே வர வேண்டும் போன்ற பல்வேறு விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்..
அனைவரும் ஒன்றுபட்டு அரசால் மேற்கொள்ளப்படும் அனைத்து அனைத்து செயல்களுக்கு ஒத்துழைப்பு விளங்கி கொரோன இல்லாத நாட்டை உருவாக்குவோம் தனித்து இருப்போம் விலகி இருப்போம் வீட்டில் இருப்போம் என்று கூறினார்..



Popular posts
ஈரானில் பலியானோர் எண்ணிக்கை 354 ஆக உயர்வு
Image
என்.பி.ஆர். குறித்து அமைச்சர் உதயகுமார் விளக்கம் - முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது - வி.எம்.எஸ்.முஸ்தபா கண்டனம்
Image
பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது இந்தியா ஏவுகணைகளை வீசி அதிரடி தாக்குதல்
Image
பால் வாங்கக்கூட வாங்கபணம் இல்லாததால் பழைய கஞ்சி தண்ணீரை கொடுத்து குழந்தைகளுக்கு சமாளித்தது.
Image