" alt="" aria-hidden="true" />
என்.பி.ஆர். குறித்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது என
தமிழ்நாடு முஸ்லிம் லீக் மாநில தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா கூறிஉள்ளார் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை
சி.ஏ.ஏ. சட்டத்துக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்.பி.ஆர்., என்.ஆர்.சி,யை தமிழகத்தில் அமல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் லீக் உள்பட பல்வேறு அமைப்புகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்களும் தன்னிச்சையாக ஆங்காங்கே தர்ணா போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பெண்களை அழைத்து சிஏஏ வுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் கொண்டு வரும் முதல்வர் எடப்பாடியும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், என்.பி.ஆர். லிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாகவும், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை தமிழக அமைச்சர்கள் சந்தித்திருப்பதாகவும், மார்ச் 09ல் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தொடரில் அது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் செய்திகளின் மூலம் தகவல்கள் வெளியாகி .
சட்டமன்ற கூட்டம் கடந்த 9ம் தேதி கூடியது, 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு 11ம் தேதி மீண்டும் கூடியது. அன்றைய தினம் எதிர்கட்சிகள் என் .பி.ஆருக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்திய போது, பாரளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுவது மக்களை ஏமாற்று வேலை என அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். அமைச்சரின் இந்த விளக்கம் தீர்மானத்தை தமிழக அரசு கொண்டு வரும் என எதிர்பார்த்த அனைத்து தரப்பினருக்கும் ஏமாற்றமாக அமைந்தது. என்ஆர்பி தொடர்பாக நேற்று பத்திரிகையாளரை சந்தித்த அமைச்சர் உதயகுமார் மீண்டும் அதே கருத்தை தெரிவித்ததோடு, மேலும் ஏப்.1 முதல் 6 மாத காலத்திற்குள் இடைபட்ட காலத்தில் 45 நாட்கள் இந்த பணி மாநிலங்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப எடுத்து கொள்ளலாம் என கூறியுள்ளார். அது மட்டுமில்லாது ஜூன் 16 முதல் ஜூலை 30ம் தேதி வரை 45 நாட்கள் வீடுகளின் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், இந்த நாட்களில் ஆசிரியர்கள் பள்ளி விடுமுறையில் இருப்பார்கள் எனவும் தெரிவித்து உள்ளார். வழக்கமாக பள்ளி இறுதிதேர்வுகள் முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறந்துவிடுவது வழக்கம். ஆனால் அமைச்சர் உதயகுமார் கூறுவது முரண்படாக உள்ளது. என்.பி.ஆருக்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து பரிசீலித்து கொண்டு இருப்பதாக முதல்வர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த நிலையில், பாரளுமன்றத்தில் நிறைவேற்றபட்ட சட்டத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் கொண்டு வர முடியாது என அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார். கச்சதீவை திரும்ப பெற வேண்டும், மத்திய அரசுக்கு கொண்டு வந்த நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மீத்தேன் , ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக தமிழக அரசு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது என் பிஆர் விவகாரத்தில் முதல்வரும், அமைச்சரும் சேர்ந்து தமிழக மக்களை ஏமாற்றுவதோடு, முழு பூசணிக்காயை சேற்றில் மறைக்கும் வேலையை செய்து வருவது வன்மையாக கண்டிக்கதக்கது. இந்த கருப்பு சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் மக்களை இனியும் காலம் தாழ்த்தாமல் சட்டபேரவையில் தீர்மானம் கொண்டு வரவில்லையென்றால், வரவிருக்கின்ற இடைத் தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உட்பட 2021 பேரவை பொதுத் தேர்தலிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி உள்ளார்